TNPSC Thervupettagam

சிறப்புத்துவத்திற்கான ஐநா விருது

October 26 , 2018 2125 days 605 0
  • நீடித்த மேம்பாட்டிற்கான துறையில் முதலீடுகளை ஊக்குவித்தமைக்காக இந்தியாவின் முதலீட்டு மேம்பாட்டுக் கழகமான இன்வெஸ்ட் இந்தியா சிறப்புத்துவத்திற்கான ஐக்கிய நாடுகள் விருதினை (United Nations - UN) வென்று இருக்கின்றது.
  • உலகின் மிகப்பெரிய காற்றாலை இயந்திரங்களை அதற்கான காற்றாலை இறக்கைத் தயாரிப்புத் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைப்பதில் ஏற்படுத்திய சிறப்புத்துவத்திற்காக இவ்விருது கிடைக்கப் பெற்றுள்ளது.
  • இவ்விருது ஜெனீவாவில் உலக முதலீட்டு மன்றத்தில் (World Investment Forum) அர்மேனியாவின் குடியரசுத் தலைவர் அர்மேன் சர்க்கிசியன் என்பவரால் இன்வெஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான தீபக் பாக்லா என்பவருக்கு வழங்கப்பட்டது.
  • இவ்விருதுகளைப் பெற்ற மற்ற வெற்றியாளர்கள்
    • பஹ்ரைன் பொருளாதார வளர்ச்சி மன்றம்
    • லெசோதோ தேசிய வளர்ச்சிக் கழகம்
    • தென்னாப்பிரிக்கா (தென்னாப்பிரிக்கா முதலீட்டு நிறுவனம்).
ஐக்கிய நாடுகள் முதலீட்டு ஊக்குவிப்பு விருது
  • இந்த விருதுகள் ஐக்கிய நாடுகள் வர்த்தக மற்றும் மேம்பாட்டுக் கழகத்தால் (United Nations Conference on Trade and Development - UNCTAD) வருடந்தோறும் வழங்கப்படுகின்றன.
  • 2002ம் ஆண்டு முதல் இவ்விருது முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டு வருகின்றது.
  • இது முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனங்களையும் அதன் அரசுகளையும் அவர்களின் சாதனைகளுக்காகப் பாராட்டுகின்றது.
  • 2017ம் ஆண்டின் வெற்றியாளர்கள் எத்தியோப்பிய முதலீட்டு ஆணையம், ஸ்பெயினின் கோஃபைட்ஸ் நிறுவனம் மற்றும் மொரீசியஸின் முதலீட்டு மன்றம் ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்