TNPSC Thervupettagam

சிறப்புப் பாதுகாப்புக் குழுவிற்கான புதிய விதிகள்

June 1 , 2023 418 days 248 0
  • உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது உயர்நிலைச் சிறப்புப் பாதுகாப்புக் குழுவிற்கான (SPG) புதிய விதிகளை அறிவித்துள்ளது.
  • இனி இந்தியக் காவல் பணியைச் சேர்ந்த கூடுதல் தலைமை இயக்குநர் பதவியின் தரத்திற்கு குறையாத ஒரு அதிகாரியால் இது கையாளப் படும்.
  • முன்னதாக, சிறப்புப் பாதுகாப்புக் குழுவானது ஒரு தலைமைக் காவல் ஆய்வாளர் (IGP) அந்தஸ்து கொண்ட அதிகாரியின் தலைமையில் செயல்பட்டது.
  • அதன் இளம் அதிகாரிகள் ஆரம்பக் கட்டத்தில் ஆட்பேருரிமையின் பேரில், முதல் ஆறு வருடக் காலத்திற்கு நியமிக்கப் படுவார்கள்.
  • 1988 ஆம் ஆண்டு சிறப்புப் பாதுகாப்புக் குழுச் சட்டத்தின் 2019 ஆம் ஆண்டு திருத்தத்தின் படி, இந்தப் படைப் பிரிவானது தற்போது பிரதமர் மற்றும் அவரது நெருங்கியக் குடும்ப உறுப்பினர்களை மட்டுமே பாதுகாக்கிறது.
  • பதவிக் காலத்திற்குப் பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட இல்லத்தில் வசிக்கும் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்தப் படைப் பாதுகாப்பு அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்