TNPSC Thervupettagam

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (திருத்த) மசோதா, 2019

August 3 , 2019 1944 days 787 0
  • சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (திருத்த) மசோதா, 2019 ஆனது நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது.
  • இது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005ஐ திருத்துகின்றது.
  • இதற்கு முந்தைய சட்டத்தின்படி, ஒரு நபர் என்ற வரையறையில் ஒரு தனிநபர், ஒரு இந்து கூட்டுக் குடும்பம், ஒரு நிறுவனம், ஒரு கூட்டுறவு சமூகம், ஒரு தொழிற்சாலை, நபர்களின் கூட்டமைப்பு (சங்கம்) ஆகியவை உள்ளடங்கும்.
  • இந்த மசோதாவானது இந்த வரையறையில் மேலும் 2 பிரிவுகளைச் சேர்த்துள்ளது. அவையாவன ஒரு அறக்கட்டளை மற்றும் மத்திய அரசினால் அறிவிக்கப்படும் எந்தவொரு இதர நிறுவனங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்