சிறார்களுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமை (திருத்தம்) மசோதா, 2017
July 23 , 2017 2726 days 1149 0
2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், மக்களவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சிறார்களுக்கான இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமை (திருத்தம்) மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார்
இந்த மசோதாவானது, இதற்கு முன் இருந்த குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமை சட்டத்தில் (2009) சில திருத்தங்களைக் கொண்டுள்ளது
இந்த மசோதா ஆசிரியர்களின் நியமனத்திற்கு தேவையான குறைந்தபட்ச தகுதிகளை அடைய வேண்டிய காலக்கெடு வினை நீட்டிக்கிறது
2009ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ், ஒரு மாநிலத்தில் போதுமான அளவில் அரசின் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (அல்லது) போதுமான எண்ணிக்கையில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத போது, குறைந்தபட்ச ஆசிரியர் தகுதிச் சட்டத்திலிருந்து ஐந்து வருடம் வரை (அதிகபட்சமாக) விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அதாவது 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிவரை
மேலும் மார்ச் 31, 2015 அன்று குறைந்தபட்ச தகுதி இல்லாத ஆசிரியர்கள், நான்கு ஆண்டு காலத்திற்குள் (2019 மார்ச் 31 ஆம் தேதிக்குள்) குறைந்தபட்ச தகுதிகளினைப் பெற வேண்டும் என்று இந்த மசோதா குறிப்பிடுகிறது
சிறார்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் (RTE)
இலவச மற்றும் கட்டாய கல்விக்கான உரிமைச் சட்டம், (RTE) இந்திய பாராளுமன்றத்தால் ஆகஸ்டு 4, 2009 அன்று இயற்றப்பட்ட சட்டமாகும்.
இச்சட்டம் இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவில் உள்ள சரத்து 21-A இன் கீழ் இந்தியாவில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்விக்கான முக்கியத்துவத்தை விவரிக்கிறது. ஏப்ரல் 1, 2010 அன்று சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது குழந்தைகள் கல்வியை அடிப்படை உரிமையாக்கிய 135 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.