இந்திய அரசானது, தனியார் துறையுடன் இணைந்து சிறிய அணு உலைகள் (SMRs) குறித்து ஆய்வு செய்து அவற்றினைச் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது.
10 மெகாவாட் முதல் 300 மெகாவாட் திறன் கொண்ட SMR உலைகள் ஒவ்வொன்றும், அவற்றின் வழக்கமான வடிவ உலைகளை விட சிறிய வடிவங்கள் ஆகும்.
நேரம் மற்றும் செலவினங்கள் எதுவும் அதிகம் இல்லாமல் அவற்றினை நிறுவ இயலும் என்பதோடு, SMR தளத்தில் கிடைக்கப் பெறும் ஆற்றலைப் பயன்படுத்தலாம்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் ஒருங்கிணைக்கும் அவற்றின் திறன் ஆனது, ஒரு மீள்தன்மை கொண்ட ஒரு கட்டமைப்பினை வழங்குவதோடு இடையீட்டுச் செயல்பாடு மேலாண்மை செய்வதற்கான திறனையும் நன்கு வழங்குகிறது என்ற நிலைமையில் இதற்கானச் செலவினம் சுமார் கிலோ வாட் அலகிற்கு 4 ரூபாய் ஆகும்.