TNPSC Thervupettagam

சிறிய இந்தியா வாயில் துவக்கம்

November 6 , 2018 2116 days 646 0
  • இந்தோனேஷியாவில் சமீபத்தில் அதன் நான்காவது மிகப்பெரிய நகரமான மேதான் நகரத்தில் கம்புங் மதராஸ் அல்லது மதராஸ் கிராமப் பகுதியில், இம்மாதிரியான அமைப்பில் முதல்முறையாக, சிறிய இந்தியா வாயில் (Little India Gate) என்பது துவக்கி வைக்கப் பட்டிருக்கின்றது.
  • இந்த வாயில் மேதான் நகரத்தின் முன்னேற்றத்தில் இந்தியச் சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கின்றது.
  • கம்புங் மதராஸ் பகுதியானது நகரத்தின் முக்கியப் பழங்குடியின மக்களைக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஒன்றாகும்.
  • 19வது நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் மேதான் நகரத்தில் குடியமர்ந்த மூதாதையர்களின் வழித்தோன்றல்களான இந்திய வம்சாவளி மக்களின் மிகப்பெரும் எண்ணிக்கையை இது கொண்டிருக்கின்றது.
  • தைப்பூசம், தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் மற்றும் தீபாவளி ஆகிய இந்து மற்றும் தமிழ் பண்டிகைகளுக்கான ஒரு சங்கமிக்கும் களமாக கம்புங் மதராஸ் உருவெடுத்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்