இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது தனியார் பங்களிப்புடன் சிறிய செயற்கைக் கோள் ஏவுகலத்தினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த ஏவுகலமானது 500 கி.மீ. சுற்றளவுடைய ஒரு புவி அல்லது கோள் சுற்று வட்டப் பாதைக்கு 500 கி.கி. எடையுள்ள செயற்கைக் கோளை ஏந்திச் செல்லும் திறனுடையது.
துருவ செயற்கைக் கோள் ஏவுகலத்திற்குப் பதிலாக குறைவான செலவு மற்றும் அதிக ஏவுதல் வீதத்துடன், வணிக ரீதியிலான சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான நோக்கத்துடன் இந்த ஏவுகலமானது உருவாக்கப்படுகிறது.