TNPSC Thervupettagam

சிறிய தீவுகள் மீதான அமெரிக்காவின் வரி

April 10 , 2025 9 days 43 0
  • அமெரிக்க நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப், மிகவும் சிறிய ஆப்பிரிக்க அரசான லெசோதோவிலிருந்து வரும் பொருட்கள் மீது மிக அதிகபட்சமாக 50% வரியை விதித்து உள்ளார்.
  • ஆஸ்திரேலியாவின் மற்றப் பகுதிகளைப் போலவே, ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகளும், கோகோஸ் (கீலிங்) தீவுகளும் கிறிஸ்துமஸ் தீவும் தற்போது 10% வரிக்கு உட்படும்.
  • சுமார் 2,200 என்ற அளவில் மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியப் பகுதிப் பிரதேசமான நோர்போக் தீவில் 29% வரி விதிக்கப்பட்டது.
  • ஹியர்ட் தீவு ஆனது மிகத் தரிசாக, பனிக்கட்டியால் சூழ்ந்த மற்றும் முற்றிலும் மக்கள் வசிக்காததாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மற்றும் செயலில் உள்ள எரிமலையான பிக் பென் அமைந்துள்ள, பெரும்பாலும் பனிப்பாறைகளால் சூழப் பட்டு உள்ளது.
  • இந்தத் தீவுகளானது யுனெஸ்கோ அமைப்பினால் வெளிப்புற தாவரங்கள், விலங்குகள் அல்லது மனித தாக்கம் இல்லாத சுற்றுச்சூழல் அமைப்பின் அரிய உதாரணமாக உலக பாரம்பரியப் பட்டியலில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்