சிறிய நெகிழித் துகள்கள் மற்றும் நுண் நெகிழித் துகள்களின் தாக்கம்
July 17 , 2023 496 days 324 0
மனித ஆரோக்கியத்தின் மீது சிறிய நெகிழித் துகள்கள் மற்றும் நுண் நெகிழித் துகள்களின் தாக்கம் குறித்த ஒரு அறிக்கையினை உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ளது.
சிறிய நெகிழித் துகள்கள் குடல் அழற்சி மற்றும் குடல் டிஸ்பயோசிஸ் - குடல் நுண்ணுயிரி மற்றும் நுண்ணுயிரித் தொகுதி மாற்றங்கள் – ஆகியவற்றிற்கு வழி வகுக்கிறது.
இதன் தாக்கங்கள் நீர்வாழ் இனங்கள் மற்றும் கொறித்துண்ணிகளிலும் உள்ளன.
அவை பெரிய மண்ணின் நுண்ணுயிரிகளைப் பாதிப்பதோடு, ஒட்டு மொத்த உணவு வலையிலும் ஊடுருவிப் பரவுகின்றன.
அவை இறுதியில் மனித நுரையீரல் திசு, நஞ்சுக் கொடி, மலம், இரத்தம் மற்றும் கரு மலம் (மெகோனியம்) ஆகியவற்றில் படிகின்றன.
சிறிய நெகிழித் துகள்களின் அளவு 0.1 முதல் 5 மைக்ரோமீட்டர் வரை மற்றும் நுண் நெகிழித் துகள்களின் அளவு 0.001 முதல் 0.1 மைக்ரோமீட்டர் வரை ஆகும்.