TNPSC Thervupettagam

சிறிய நெகிழித் துகள்கள் மற்றும் நுண் நெகிழித் துகள்களின் தாக்கம்

July 17 , 2023 368 days 263 0
  • மனித ஆரோக்கியத்தின் மீது சிறிய நெகிழித் துகள்கள் மற்றும் நுண் நெகிழித் துகள்களின் தாக்கம் குறித்த ஒரு அறிக்கையினை உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • சிறிய நெகிழித் துகள்கள் குடல் அழற்சி மற்றும் குடல் டிஸ்பயோசிஸ்  - குடல் நுண்ணுயிரி மற்றும் நுண்ணுயிரித் தொகுதி மாற்றங்கள் – ஆகியவற்றிற்கு வழி வகுக்கிறது.
  • இதன் தாக்கங்கள் நீர்வாழ் இனங்கள் மற்றும் கொறித்துண்ணிகளிலும் உள்ளன.
  • அவை பெரிய மண்ணின் நுண்ணுயிரிகளைப் பாதிப்பதோடு, ஒட்டு மொத்த உணவு வலையிலும் ஊடுருவிப் பரவுகின்றன.
  • அவை இறுதியில் மனித நுரையீரல் திசு, நஞ்சுக் கொடி, மலம், இரத்தம் மற்றும் கரு மலம் (மெகோனியம்) ஆகியவற்றில் படிகின்றன.
  • சிறிய நெகிழித் துகள்களின் அளவு 0.1 முதல் 5 மைக்ரோமீட்டர் வரை மற்றும் நுண் நெகிழித் துகள்களின் அளவு 0.001 முதல் 0.1 மைக்ரோமீட்டர் வரை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்