பீகாரில் உள்ள கயாவில் அமைந்த பிரம்மயோனி என்ற மலையில் காணப்படும் பல மருத்துவ குணம் கொண்ட தாவரங்களில் பொதுவாக குர்மர் எனப்படும் ஜிம்னிமா சில்வெஸ்ட்ரை (சிறு குறிஞ்சான்) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குர்மர் நீரிழிவு நோய்க்கான எதிர்ப்புத் திறன் கொண்ட ஒரு மூலிகை என்று அறியப் படுகிறது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையமானது (CSIR) ஏற்கனவே BGR-34 எனப்படும் நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்க இந்த மருத்துவம் குணம் கொண்ட மூலிகையைப் பயன்படுத்தியுள்ளது.
இந்த மூலிகையில் ஜிம்னெமிக் அமிலம் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் அதன் தனித்துவமான திறனுக்காக குர்மர் அறியப்படுகிறது.