- மத்திய அரசு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பை அடைவதற்காக திட்ட முறையில் (Mission Mode) கேழ்வரகு, சோளம் போன்ற சிறு தானிய வகைகளை சாகுபடி செய்வதை ஊக்குவிக்கிறது.
- ஊட்டச்சத்து தானியங்கள் எனவும் அழைக்கப்படும் சிறு தானியங்கள், ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படுவதுடன் மதிய உணவுத்திட்டம் மற்றும் பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றிலும் இணைக்கப்பட்டுள்ளன.
- நுகர்வு முறை, உணவுப் பழக்கங்கள், சிறு தானியங்களின் பற்றாக்குறை, குறைந்த மகசூல், குறைவான தேவை மற்றும் அரிசி & கோதுமை சாகுபடிக்காக பாசன பரப்பு (irrigated area) மாற்றப்படுதல் ஆகிய காரணங்களால் சிறு தானியங்களின் சாகுபடி குறைந்துள்ளது.
- இதன் விளைவாக புரதம், வைட்டமின் – A, இரும்புச்சத்து மற்றும் அயோடின் போன்ற ஊட்டச்சத்துகளின் அளவுகள் பெண்கள் மற்றும் குழந்தைகளில் குறைந்துள்ளன.
- இது சிறு தானியங்களின் மீது சிறப்பு கவனம் செலுத்துவதற்கு வழிகோலியது. இச்சிறு தானியங்கள் நிதி ஆயோக் உறுப்பினர் இரமேஷ் சந்தின் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்படுகின்றன.
சிறு தானியங்கள் – புவியியற் பின்புலம்
- வறட்சியைத் தாங்கும் தன்மை கொண்டவைகளான சிறு தானியங்கள், ஒளியினால் மாறுபாடு அடையாத, பருவநிலை மாற்றத்தை எதிர்த்து நிற்கும் தன்மையுடையவையாகும்.
- அரிசி மற்றும் கோதுமையுடன் ஒப்பிடுகையில் இவற்றின் சாகுபடிக்கான நீர்த்தேவை குறைவாகும்.
- ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், மஹாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள வளம் குறைந்த நிலப்பகுதிகள், மலைப்பாங்கானப் பகுதிகள், பழங்குடியினப் பகுதிகள் மற்றும் மானாவாரிப் (Rain fed) பகுதிகளில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.