இயற்கை வேளாண்மை மற்றும் சிறுதானியங்கள் மீதான சர்வதேச வர்த்தக கண்காட்சி அண்மையில் பெங்களூரூவில் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் 2018-ஆம் ஆண்டை “சிறு தானியங்களுக்கான தேசிய ஆண்டாக“ (National year of Millets) அறிவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
2018-ஆம் ஆண்டை சிறுதானியங்களுக்கான தேசிய ஆண்டாக அறிவிப்பது மக்களிடையே சிறுதானியங்களால் உண்டாகும் உடல் நல ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வை மட்டும் அதிகரிக்காமல், வறட்சித் தாங்கு தானிய வகைகளான இவைகளின் தேவையையும் அதிகரிப்பதால் சிறுதானிய ஏழை மற்றும் சிறுகுறு விவசாயிகளுக்கு இலாபகரமான விளைபொருள் விலையும் கிடைக்கும்.