TNPSC Thervupettagam

சிறு நிதிக் கடன்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு

April 18 , 2022 953 days 448 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது சிறுநிதி கடன்களுக்கான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை அறிவித்தது.
  • இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி சாரா நிதி நிறுவனங்களான சிறு நிதி நிறுவனங்கள்  வழங்கும் சிறு நிதிக் கடன்களின் மதிப்பு நிர்ணயம் செய்வதற்கான வரம்புகளை நீக்கி உள்ளது.
  • முன்னதாக, சிறு நிதிக் கடன் நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதத்தில் வரம்பு இருந்தது.
  • அதிகபட்ச வட்டி விகிதமானது, நிறுவனத்தால் ஏற்படும் நிதிச் செலவை விட 10-12% அதிகமாகும் அல்லது முதல் ஐந்து பெரிய வணிக வங்கிகளின் சராசரி அடிப்படை விகிதத்தை விட 2.75 மடங்கு (இவற்றுள் எது குறைவோ) ஆகும்.
  • இப்போது, ​​இந்த வரம்புகளை அகற்றுவது வங்கி சாரா நிதி நிறுவனங்களான சிறு நிதி நிறுவனங்களை, வங்கிகள் போன்ற மற்ற கடன் வழங்கும் நிறுவனங்களின் நிலைக்கு கொண்டு வருகிறது.
  • மேலும், நுண்கடன் பெறத் தகுதியுடையக் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்