TNPSC Thervupettagam

சிறு மானியங்கள் திட்டம்

February 17 , 2019 2109 days 650 0
  • சமீபத்தில் புதுதில்லியில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், உலகச் சுற்றுச்சூழல் வசதி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் சிறு மானியங்கள் திட்டம் (Small Grants Programme - SGP) ஆகியவற்றின் மீது ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
  • இத்திட்டம் 1992 ஆம் ஆண்டில் 33 நாடுகளில் பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
  • சிறு மானியங்கள் திட்டம் உலகச் சுற்றுச்சூழல் வசதியின் கூட்டுப் பங்காண்மை சார்பில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தால் நிறைவேற்றப்படுகின்றது.
  • பெண்கள் மற்றும் பூர்வ குடிமக்கள் உள்ளிட்ட ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள், உள்ளூர் பொதுச் சமூக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அதிகாரமளித்திடும் வகையில் கடைமட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக இத்திட்டம் தனித்துவமாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றது.
  • இத்திட்டம் ஒரு அதிகாரப் பரவலாக்கப்பட்ட தேசிய அளவிலான விநியோக அமைப்புமுறை மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
  • சிறுமானியங்கள் திட்டம் உலகளாவிய சுற்றுச்சூழல் விவகாரங்களுக்குத் தீர்வுகள் அளித்திட சமூகத்தால் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகளுக்கு நிதி அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்