2022-23 ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டிற்கான (ஏப்ரல்-ஜுன் 2022) சிறு சேமிப்புத் திட்டங்கள் (அ) தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி வீதங்களை மாற்றாமல் வைத்திருக்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் – ஜுன் மாதங்களுக்கான பல்வேறு திட்டங்கள் மீதான வட்டி வீதங்கள் 4.0% முதல் 7.6% வரை என்ற வரம்பிலேயே உள்ளது.
சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதங்களை அரசு காலாண்டு அடிப்படையில் அறிவிக்கிறது.
சிறுசேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி வீதங்கள் தொடர்ந்து 8வது காலாண்டாக மாற்றப் படாமல் உள்ளது.