மத்தியப் பிரதேச வனத்துறையானது தனது சிறுத்தை மீள்அறிமுகத் திட்டத்தை உயிரூட்டுவதற்காக தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு (NTCA-National Tiger Conservation Authority) கடிதம் எழுதியுள்ளது.
இந்தத் திட்டமானது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் தடைபட்டுள்ளது.
சிறுத்தையானது இந்தியாவில் 1952ஆம் ஆண்டில் ‘மறைந்த உயிரினமாக‘ (Extinct) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடைசியாகக் காணப்பட்ட ‘ஆசிய சிறுத்தையானது‘ 1947-ல் சத்தீஸ்கரில் இறந்தது.
தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையமானது மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சட்டமுறையிலான அதிகார அமைப்பாகும்.