ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று சிறுபான்மையினர் உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினமானது இந்தியாவில் மொழி, சாதிமத மற்றும் நிற அடிப்படையிலான சிறுபான்மையினரின் நலன்களை மேம்படுத்துதல், பேணுதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டது.
1992 டிசம்பர் 18 அன்று ஐ.நா. வானது சிறுபான்மையினரை வலுப்படுத்தும் நோக்கத்துடன் தேசிய அல்லது இன, மத, மொழி சார்ந்த சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மீதான பிரகடனத்தை வெளியிட்டது.
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தைக் கொண்டாடுகிறது.