இந்தத் தினமானது 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையின், தேசிய அல்லது இன, மத மற்றும் மொழி சார் சிறுபான்மைக் குழுக்களைச் சேர்ந்த நபர்களின் உரிமைகள் பிரகடனத்தினைக் குறிக்கிறது.
இந்தப் பிரகடனம் ஆனது சிறுபான்மையினரின் கலாச்சாரம், மொழி மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான உரிமையை மிகவும் வலியுறுத்தும் விதமாக உலகளவில் உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான சில கொள்கைகளை வகுத்தது.
இந்திய அரசும் 1992 ஆம் ஆண்டில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தினை (NCM) நிறுவியது.