TNPSC Thervupettagam

சிறுமிகளுக்கான ஒரு புதிய சகாப்தம்: அறிக்கை

March 13 , 2020 1626 days 538 0
  • சமீபத்தில் "சிறுமிகளுக்கான ஒரு புதிய சகாப்தம்: 25 ஆண்டுகால முன்னேற்றங்கள் குறித்த ஆய்வு" என்ற ஒரு அறிக்கையானது யுனிசெஃப், பிளன் இன்டர்நேஷனல் மற்றும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு ஆகியவற்றால் வெளியிடப்பட்டது.
  • 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பள்ளிகளில் சிறுமிகள் இடைநிற்றல் விகிதமானது 20%திலிருந்து 13.5% ஆகக் குறைந்துவிட்டாலும், அதிக முன்னேற்றமானது நிகழவில்லை என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • பல பெண்கள் இன்னும் வன்முறைச் சூழலை எதிர்கொள்கின்றார்கள் என்றும் 15 - 20 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு 20 சிறுமிகளிலும் ஒருவர் திருமணத்திற்குப் பின்பும் திருமணத்திற்கு முன்பும் வன்புணர்விற்கு உள்ளாகின்றனர் என்றும் இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்த அறிக்கையில் “கற்றல் தொடர்பான பிரச்சினை” என்று அழைக்கப்படும் ஒரு சொல்லானது குறிப்பிடப் பட்டுள்ளது. இதன் பொருள் சிறுமிகள் பள்ளிக்குச் சென்றாலும் கூட, பலர் தரமான கல்வியைப் பெறுவதில்லை என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்