மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது ‘சிறைச்சாலைகளில் பெண்கள்’ என்னும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் நோக்கம் சிறைச்சாலைகளில் பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை புரிந்து கொள்ளுதல், சிறைச்சாலைகளில் பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு சாத்தியமான முறையில் தீர்வு காணுதல் ஆகும்.
சிறைச் சாலைகளில் உள்ள பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த விரிவான பட்டியல் கொண்ட 134 பரிந்துரைகள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. கருத்தரித்தல் தொடர்பான பல்வேறு வகையான பிரச்சனைகள், சிறைச்சாலைகளில் பிள்ளைப்பேறு, அவர்களின் மன ஆரோக்கியம், சட்ட உதவி மற்றும் சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுதல் ஆகிய பரிந்துரைகள் இந்த அறிக்கையில் அடங்கும்.