TNPSC Thervupettagam

சிறையில் நிலவும் சாதிவெறி குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

October 13 , 2024 43 days 115 0
  • சிறைகளில் நிலவும் சாதி அடிப்படையிலான தொழிலாளர் பிரிப்பு முறை என்பது "அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
  • உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள சிறைக் கையேடுகளில் உள்ள சாதி ஏற்றத் தாழ்வுகளை சட்டப்பூர்வமாக்கும் விதிகள் காணப்படுவதையும் இது சுட்டிக்காட்டியது.
  • இராஜஸ்தான் சிறைச்சாலை விதிகள் 1951 ஆனது, பட்டியலினச் சமூகமான "மேத்தர்" சாதியினருக்கு கழிப்பறை சார்ந்த பணிகளையும் மற்றும் பிராமணர்கள் அல்லது "உயர் சாதி சார்ந்த" இந்து கைதிகளுக்கு சமையலறை பணிகளையும் ஒதுக்கியுள்ளது.
  • சாதியின் அடிப்படையில் கைதிகளைப் பிரிப்பது சாதி வேறுபாடுகள் அல்லது சாதி குரோதத்தை வலுப்படுத்தும் என்பதால் அது முதலில் தடுக்கப்பட வேண்டும் என கூறி உள்ளது.
  • "பழக்கம்," "வழக்கம்," "உயர்ந்த வாழ்க்கை முறை" மற்றும் "சிறையில் இருந்து தப்பிக்கும் இயற்கையான மனப் போக்கு" ஆகியவற்றின் அடிப்படையில் கைதிகளை வேறுபடுத்துவது, சமத்துவத்தின் கொள்கைகளை சிதைக்கிறது.
  • அனைத்து மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் இத்தகையப் பாகுபாடு மிக்க நடைமுறைகளை ஒழிப்பதற்காக மூன்று மாதங்களுக்குள் சிறை கையேடுகள் மற்றும் விதிகளை திருத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • சிறைகளில் வைக்கப் பட்டிருக்கும் விசாரணைக் கைதிகள் மற்றும் குற்றவாளிகளின் பதிவேட்டில் உள்ள "சாதி குறித்த பத்தி" மற்றும் சாதி பற்றிய எந்த குறிப்புகளையும் நீக்க என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டு கையேடு மற்றும் 2023 ஆம் ஆண்டு சட்டம் ஆகிய இரண்டிலும் தேவையான சீர்திருத்தங்களை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்