TNPSC Thervupettagam

சிலந்திகள் – அசாம்

July 11 , 2021 1142 days 526 0
  • அசாமின் மேற்குப் பகுதியின் சிராங் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் (Chirang Reserve Forest) ஜார்பாரி வனப் பிரிவில் (Jharbari range) இரண்டு புதிய சிலந்தி இனங்கள்  கண்டறியப் பட்டுள்ளன.
  • இரு சிலந்தி இனங்களும் ஒரே இடத்தில் வாழ்கின்றன.
  • கிரேவெலியா போரோ என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலத்தில் வலை அமைக்கும் சிலந்தி ஆகும்.
  • டெக்சிபஸ் க்ளெய்னி என்பது ஓரியண்டல் குதிக்கும் சிலந்தி (oriental jumping spider) ஆகும்.
  • இந்த இரு சிலந்தி இனங்களும் போடோலாண்ட் பிராந்தியப் பகுதியில் கண்டறியப் பட்டுள்ளன.
  • கிரேவெலியா போரோ இனமானது நெமிசிடே (Nemesiidae) குடும்பத்தைச் சேர்ந்தது.
  • டெக்சிபஸ் களெய்னி இனமானது சால்டிசிடே (Salticidae) குடும்பத்தைச்  சேர்ந்தது.
  • சால்டிசிடே குடும்பமானது புவியிலுள்ள அனைத்து சிலந்தி இனங்களின் மிகப்பெரிய குடும்பமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்