2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திரக் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப் படும் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பில், 196 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் சிலிக்கா ஏரியில் குவிந்துள்ளன.
இந்த ஏரிக்கு வருகை தரும் பறவை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு சுமார் 11.37 லட்சமாக இருந்த பறவைகளின் எண்ணிக்கையினை விட தற்போது 10,000 குறைவு பதிவாகியுள்ளது.
இந்தப் பருவத்தில் 109 வலசை போகும் பறவைகள் மற்றும் 87 உள்நாட்டுப் பறவைகள் சிலிக்கா ஏரியில் சுற்றித் திரிகின்றன.
கடந்த ஆண்டு சுமார் 187 இனங்கள் (108 வலசை போகும் இனம் மற்றும் 79 உள்நாட்டுப் பறவைகள்) கண்டறியப்பட்டன.
நலபானா பறவைகள் சரணாலயத்தில், கடந்த ஆண்டில் சுமார் 3.47 லட்சமாக இருந்த பறவைகளின் எண்ணிக்கையானது தற்போது 3.42 லட்சமாக உள்ளது.