பழமைவாத கட்சியின் செபாஸ்டியன் பினேரா சிலியின் அதிபர் தேர்தலில் வென்றுள்ளார்.
பினேரா தன்னை எதிர்த்து போட்டியிட்ட மைய – இடது வேட்பாளர் சென் அலெஜான்ரோ குயில்லர் பெற்ற 45.4 சதவீதத்தை விட அதிகமாக 54.6 சதவீத ஓட்டுக்களைப் பெற்றார்.
இவர் 2010 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் சிலியின் அதிபராக இருந்தார்.
பினேரா லத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் “வளர்ச்சியடைந்த நாடு” என்ற தகுதியை பாரீசை மையமாகக் கொண்ட வளமான நாடுகளின் குழுவான பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் (Organization for Economic Cooperation and Development - OECD) பெறுவதற்கு உறுதி பூண்டுள்ளார்.