TNPSC Thervupettagam

சில்லறை விற்பனை பணவீக்கம்

May 17 , 2022 923 days 428 0
  • இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் உணவு விலைகள் 8.5% என்று வேகமாக உயர்ந்ததையடுத்து, மார்ச் மாதத்தில் 7.7% ஆக இருந்த நுகர்வோர் உணவு விலைக் குறியீடானது 8.4% ஆக உயர்ந்தது.
  • சில்லறைப் பணவீக்கமானது தொடர்ந்து நான்காவது மாதமாக 6 சதவீதத்திற்கு மேல் நிலைத்து உள்ளது.
  • மார்ச் மாதத்தில் வெறும் 8% ஆக இருந்த போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த பணவீக்கமானது ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட 11% ஆக உயர்ந்துள்ளது.
  • ஆடைகள் மற்றும் காலணி விலைகள் குடும்பங்களுக்கு ஒரு அச்சுறுத்தலைத் தரக் கூடிய அளவிலேயே தொடர்ந்தன.
  • இரண்டும் இணைந்து இருந்த அதன் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 9.4% என்ற நிலையில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 9.85% ஆக உயர்ந்துள்ளது.
  • மாநில அளவில், மேற்கு வங்காளம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேசியச் சராசரியை விட அதிக பணவீக்க விகிதம் (9.1%) பதிவாகியுள்ளது.
  • அதனைத் தொடர்ந்து தெலுங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் பணவீக்கம் 9% ஆகப் பதிவாகியுள்ளது.
  • அதற்கு மாறாக, கேரளா (5.08%) மற்றும் தமிழ்நாடு (5.37%) ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் மிகக் குறைந்தப் பணவீக்க விகிதமே பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்