மத்தியப் புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உணவுப் பணவீக்கமானது 14.12% ஆக அதிகரித்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 10.01% ஆக இருந்தது.
நுகர்வோர் விலைக் குறியீடானது (CPI - consumer Price Index) முந்தைய (நவம்பர்) மாதத்தில் 5.54 சதவீதமாக இருந்தது. இது தற்பொழுது (டிசம்பர்) 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தப் பணவீக்கமானது முக்கியமாகக் காய்கறிகளால் ஏற்பட்டுள்ளது.
முதல் முறையாக, இந்தப் பணவீக்கமானது இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள 4% (± 2%) என்ற பணவீக்க இலக்கைக் கடந்து விட்டது.