சில்லுகளில் மனித உறுப்பு செயல்பாட்டு தொழில்நுட்பம்
September 23 , 2024 61 days 127 0
உயிரித் தொழில்நுட்பத் துறையில் புதுமைகளை உருவாக்குவதற்காக என்று இந்திய அரசானது ‘BioE3’ கொள்கையை அறிவித்துள்ளது.
இதற்காக அது உயிரி உற்பத்தி மையங்கள், உயிரி செயற்கை நுண்ணறிவு மையங்கள் மற்றும் உயிரி சார் நிறுவனங்களை நிறுவியுள்ளது.
மரபணு சார்ந்த சிகிச்சை மற்றும் உயிரணு சார்ந்த சிகிச்சை போன்ற உயிரியல் சார் நுட்பத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதையும் இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளாவிய சில்லுகளின் மூலம் மனித உறுப்பு செயல்பாட்டு சந்தையானது 2032 ஆம் ஆண்டில் சுமார் 1.4 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சில்லுகளின் மூலம் மனித உறுப்பு செயல்பாட்டு நுட்பம் என்பது ஒரு கட்டுப்படுத்தப் பட்ட நுண்ணிய சூழலில் சில மனித உறுப்புகளின் இயக்க செயல்பாடுகளை மீண்டும் உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும்.
ஒரு மருந்தின் பெரும் தாக்கங்களைச் சோதிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயன்படுத்தும் உயிரணு வளர்ப்பு மாதிரிகள் மற்றும் விலங்கு மாதிரிகளை விட அவை சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசானது சில்லுகளின் மூலம் மனித உறுப்புச் செயல்பாட்டு நுட்பத்தினைப் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் 2019 ஆம் ஆண்டு புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் விதிகளைத் திருத்தியமைத்துள்ளது.