சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU) ஆனது சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் தரையிறங்கு கலத்தின் தரையிறக்கத் தளத்திற்கு ‘சிவசக்தி' என்று பெயரிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது இயற்கையின் ஆண்பால் (சிவன்) மற்றும் பெண்பால் (சக்தி) வடிவங்களின் இருமையைக் குறிக்கும் இந்தியப் புராணச் சொற்கூறுகளை கொண்ட ஒரு கூட்டுச் சொல்லாகும்.
இந்தியாவின் சந்திரயான்-1 கலத்தின், நிலவின் மீது மோதி தரையிறக்கச் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் ஒரு கருவியானது (MIP) 2008 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதியன்று நிலவின் மேற்பரப்பில் மோதி இறங்கியது.
இது மோதிய தளத்திற்கு 'ஜவஹர் புள்ளி' அல்லது 'ஜவஹர் ஸ்தலம்' என்று பெயரிடப் பட்டது.