சீனாவின் தியான்வென்-1 விண்வெளி ஆய்வுக் கலமானது செவ்வாய்க் கிரகத்தின் முதல் படத்தைப் பூமிக்கு அனுப்பியுள்ளது.
இதை சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
ஷியாபரெல்லி பள்ளம் மற்றும் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பரந்த பள்ளத்தாக்கான வால்ஸ் மரினெரிஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய செவ்வாய்க் கிரகத்தின் புவியியல் அம்சங்களை இது காட்டுகிறது.
இந்த விண்கலம் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏவப்பட்டது.
இந்தப் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து சுமார் 2.2 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்டது.