TNPSC Thervupettagam

சிவப்புப் பாண்டா கரடிகள் அறிமுகம்

July 16 , 2022 736 days 353 0
  • மேற்கு வங்காளத்தின் பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்கா நிர்வாகமானது சுமார் ஐந்து ஆண்டுகளில் 20 சிவப்பு நிறப் பாண்டா கரடிகளை காடுகளுக்குள் விடுவிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • மேற்கு வங்காளத்தில் உள்ள மிக அதிகளவில் பாதுகாக்கப்பட்டப் பகுதியான சிங்களிலா தேசியப் பூங்காவானது விரைவில் புதிய கரடி இனங்களைப் பெறவுள்ளது.
  • இது மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிங்காலிலா முகட்டில் அமைந்துள்ளது.
  • 1994 ஆம் ஆண்டில், இது சிவப்புப் பாண்டா கரடிகளுக்கான முக்கிய வன வாழ்விடமாக அறிவிக்கப் பட்டது.
  • பெரிய பாண்டா கரடி மற்றும் சிவப்புப் பாண்டா கரடி என இரண்டு வகையான பாண்டா கரடிகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன.
  • சூழலியல் மாற்றத்திற்கான ஒரு குறிகாட்டி இனமாகவும் அவை கருதப்படுகின்றன.
  • இந்தியாவில், இமயமலை சிவப்பு நிறப் பாண்டா மற்றும் சீன சிவப்பு நிறப் பாண்டா என பாண்டா கரடிகளின் இரண்டு துணையினங்கள் காணப்படுகின்றன.
  • சிவப்பு நிறப் பாண்டா கரடிகள் இந்தியா, பூடான், நேபாளம், வடக்கு மியான்மர் மற்றும் தெற்கு சீனா ஆகிய காடுகளில் பரவிக் காணப்படுகின்றன.
  • சிவப்பு நிறப் பாண்டா கரடிகள் IUCN அமைப்பின் சிவப்பு நிறப் பட்டியலில் "அருகி வரும் இனங்கள்" பிரிவில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • பெரிய பாண்டா கரடிகள் IUCN அமைப்பின் சிவப்பு நிறப் பட்டியலில் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்