TNPSC Thervupettagam

சிவப்புப் பாண்டாவின் நிலை – Traffic

March 11 , 2020 1723 days 705 0
  • "இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டை நாடுகளில் சிவப்புப் பாண்டாவின் சட்டவிரோத வர்த்தகம் தொடர்பான அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்தல்" என்ற தலைப்பைக் கொண்ட TRAFFIC அமைப்பின் அறிக்கையானது ஜூலை 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான பத்து ஆண்டுக் காலத்தில் சிவப்புப் பாண்டாவின் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தை ஆய்வு செய்துள்ளது.
  • சிவப்புப் பாண்டா ஆனது இந்தியா, நேபாளம், பூடான், மியான்மரில் உள்ள வடக்கு மலைகள் மற்றும் தெற்கு சீனா ஆகியவற்றில் மரங்களில் வாழும் ஒரு சிறிய வகைப் பாலூட்டியாகும்.
  • இது இந்தியாவில் சிக்கிம், மேற்கு அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் மேகாலயாவின் சில பகுதிகளில் காணப் படுகின்றது.
  • இது சிக்கிம் மாநிலத்தின் மாநில விலங்காகவும் விளங்குகின்றது.

TRAFFIC

  • வனவிலங்கு வர்த்தகக் கண்காணிப்பு அமைப்பான TRAFFIC ஆனது பல்லுயிர் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய இரண்டின் நிலையிலும் வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆகியவற்றின் வர்த்தகத்தில் உலகளவில் செயல்படும் ஒரு முன்னணி அரசு சாரா அமைப்பாகும்.
  • இது இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF - World Wide Fund for Nature WWF) மற்றும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு மன்றம் (IUCN – International Union for the Conservation of Nature - IUCN) ஆகியவற்றின் ஒரு உத்திசார்  கூட்டிணைவாக 1976 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • TRAFFIC அமைப்பின் தலைமையகமானது ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள கேம்பிரிட்ஜில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்