TNPSC Thervupettagam

சிவிங்கிப் புலிகளின் பராமரிப்பு குறித்த தகவல் அறியும் உரிமைச் சட்ட கோரிக்கை

July 31 , 2024 115 days 164 0
  • ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகள் மற்றும் இந்தியாவில் பிறந்த குட்டிகளின் பராமரிப்பு குறித்த தகவலுக்கான கோரிக்கையை அளிப்பதற்கு மத்தியப் பிரதேச வனத்துறை மறுத்துள்ளது.
  • வனவிலங்கு ஆர்வலர் அஜய் துபே, குனோ மற்றும் மண்ட்சூரில் உள்ள சிவிங்கிப் புலிகள் பற்றிய ஆவணப் பதிவுகளைக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கோரிக்கையைத் தாக்கல் செய்தார்.
  • இருப்பினும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(a) பிரிவினைப் பயன்படுத்தி, அந்தத் தகவலை வெளியிட வனத்துறை மறுத்துவிட்டது.
  • 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து சிவிங்கிப் புலிகள் வளங்காப்பு திட்டம் பற்றிய தகவல்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படுவதற்கு மறுக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • தற்போது, ​​ சிவிங்கிப் புலிகள் வளங்காப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, குனோவில் 26 சிறுத்தைகள் மற்றும் குட்டிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்