TNPSC Thervupettagam

சிவிங்கிப் புலிகள் வளங்காப்புத் திட்ட வழிநடத்தல் குழு

June 1 , 2023 415 days 366 0
  • இந்தியாவின் ஒரு உயர் இலட்சியமிக்கத் திட்டமான சிவிங்கிப் புலிகள் வளங்காப்புத் திட்டத்தினை மேற்பார்வையிடுவதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றினை மத்திய அரசு அமைத்து உள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் (KNP), புதிதாக பிறந்த மூன்று குட்டிகள் உட்பட ஆறு சிவிங்கிப் புலிகள் இறந்ததை அடுத்து இந்த நடவடிக்கையானது எடுக்கப் பட்டுள்ளது.
  • 11 பேர் கொண்ட இந்தக் குழுவைத் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) அமைத்து உள்ளது.
  • இந்தக் குழுவின் தலைவராக ராஜேஷ் கோபால் (தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலாளர் மற்றும் தற்போதைய உலகப் புலிகள் மன்றச் செயலாளர்) செயல்படுவார்.
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், இந்தியாவின் சிவிங்கிப் புலிகளை மறு அறிமுகப் படுத்தும் ஒரு திட்டத்தைக் கண்காணிப்பதற்காக அமைச்சகமானது "சிவிங்கிப் புலிகள் பணிக் குழு" ஒன்றை ஏற்கனவே அமைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்