TNPSC Thervupettagam

சிவிங்கிப் புலிகள் வளங்காப்புத் திட்டம் – பானி புல்வெளிகள்

July 31 , 2024 115 days 179 0
  • சிவிங்கிப் புலி வளங்காப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தைகளில் சில, குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் பகுதியில் உள்ள பானி புல்வெளியில் உள்ள சிவிங்கிப் புலி வளர்ப்பு மற்றும் வளங்காப்பு மையத்திற்கு அனுப்பப்பட உள்ளன.
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்தி சாகர் சரணாலயம் ஆனது, அடுத்த காட்டுப் பூனை இனங்களின் வளங்காப்பிற்கான விருப்பத் தேர்வாக உள்ளது என்பதோடு பானி புல்வெளிகளானது பத்தாண்டுகளுக்கும் மேலாக இவற்றிற்கான மிகச் சாத்தியமான ஒரு வாழ்விடமாக கருதப்படுகிறது.
  • பானி புல்வெளிகள் ஆனது கட்ச் பகுதியின் வடக்குப் பகுதியில் உள்ள சுமார் 3,500 சதுர கிலோமீட்டர் வரை பரவி காணப்படும் ஒரு பரந்தப் புல்வெளியாகும்.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குனோ பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட 20 பதின்பருவ வயது சிவிங்கிப் புலிகளில் 13 இந்தியப் பருவநிலைச் சூழல்களில் உயிர் பிழைத்துள்ளன.
  • கூடுதலாக, 13 குட்டிகள் ஈனப் பட்டுள்ளதால் தற்போது மொத்தமாக 26 சிவிங்கிப் புலிகள் உள்ளன.
  • இருப்பினும், குனோ வளங்காப்பகத்தின் அதிகபட்ச வாழ்வாதாரத் திறன் (கிடைக்கப் பெறும் இரையின் அடிப்படையில்) ஆனது 21 வயது வந்த விலங்குகளுக்கானது மட்டும்  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்