உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவானது, சமீபத்தில் இந்த வழித்தடத்தினைப் பாதுகாப்பதற்கு ஆதரவாக அறிக்கையளித்துள்ளது.
இந்த குழுவானது, சமீபத்தில் சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள 12 தனியார் உல்லாச விடுதிகளைச் சட்டவிரோதமானது என்று அறிவித்தது.
2010 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட யானை வழித்தட அறிவிப்பின் செல்லுபடித் தன்மையை எதிர்த்து 12 உல்லாச விடுதிகளின் உரிமையாளர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை இந்தக் குழு பரிசீலித்தது.
இந்த வழித்தடத்தில், தென்னிந்தியாவின் மிக அருகி வரும் நிலையில் உள்ள மூன்று வகை கழுகு இனங்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் காணப்படுகின்றன.