சீனத் தயாரிப்புகள் மீதான இறக்குமதிக் குவிப்புத் தடுப்பு வரி
March 29 , 2025 4 days 36 0
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயல்பான விலையை விட குறைவாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் ஐந்து தயாரிப்புகளுக்கு இந்தியா இறக்குமதிக் குவிப்புத் தடுப்பு வரியினை விதித்துள்ளது.
இந்த இறக்குமதிக் குவிப்புத் தடுப்பு வரிகள் ஆனது, குறைவான காந்த நீக்குத்திறன் கொண்ட இரும்பு உள்ளகங்கள், வெற்றிட நிரப்பு அடிப்படையில் வெப்பக் காப்பிடப் பட்ட குடுவைகள், அலுமினியத் தகடு, ட்ரைக்ளோரோ ஐசோசயனூரிக் அமிலம் (நீர் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தப்படும் அமிலம்) மற்றும் பாலி வினைல் குளோரைடு கூழ்ம நெய்மம் (பிசின்) போன்றத் தயாரிப்புகளுக்காக விதிக்கப்பட்டன.
பெரும்பாலும் "இறக்குமதி குவிப்பு" என்று குறிப்பிடப்படுகின்ற இது, அதன் சந்தையில் விற்கும் விலைக்கும் குறைவான விலையில் தயாரிப்புகளை விற்பனை செய்வதால் ஏற்படும் நியாயமற்றப் போட்டியில் இருந்து உள்நாட்டுத் தொழில் துறைகளைப் பாதுகாக்க விதிக்கப் படுகிறது.
இந்த ஒரு நடைமுறையானது, உள்நாட்டுப் பொருள் உற்பத்தியாளர்களின் தயாரிப்பு விலைகள் மற்றும் சந்தைப் பங்கைக் குறைப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும்.