TNPSC Thervupettagam

சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு – முன்னிலை கொள்கைக் குழுக்கள்

February 21 , 2019 1986 days 533 0
  • 2018 ஆம் ஆண்டின் கொள்கைக் குழுவிற்கான குறியீட்டு அறிக்கையில் சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசின் முன்னிலை கொள்கைக் குழுக்கள் என்ற பிரிவில் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளை உருவாக்கும் இந்து மையமானது 33-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் லாடர் நிறுவனத்தில் உள்ள கொள்கைக் குழுக்கள் மற்றும் மக்கள் சமுதாயத் திட்டம் என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையின்படி, அதிக எண்ணிக்கையிலான கொள்கைக் குழுக்கள் அமெரிக்காவில் உள்ளன. இதற்கு அடுத்து இந்தியா (509), சீனா (507), ஜப்பான் (128) மற்றும் தென் கொரியா (60) ஆகிய நாடுகள் உள்ளன.
  • “தி இந்து” குழுமத்தின் ஒரு பகுதியான அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளை உருவாக்கும் இந்து மையமானது அப்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜியினால் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 அன்று திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்