மாலத்தீவுகளின் முதலாவது கடலின் குறுக்கே கட்டப்பட்ட பாலமான சீனா-மாலத்தீவுகள் நட்புப்பாலம் போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டது. இப்பாலம் மாலத்தீவுகளின் தலைநகரமான மாலேவை அதன் அண்டைப் பகுதியான ஹுல்ஹுலே தீவுடன் இணைக்கும்.
21வது நூற்றாண்டிற்கான கடல்சார் பட்டுவழிப் பாதையை நிறுவுவதில் இது மாலத்தீவுகள் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டமாகும்.