TNPSC Thervupettagam

சீனா மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி

August 22 , 2017 2505 days 1083 0
  • சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கடினமான செம்பதக் கண்ணாடிகள் (Tempered Galsses) மீது மத்திய நிதி அமைச்சகம் பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.
  • சூரிய ஒளி மின்னழுத்த தகடுகள் மற்றும் பிற சூரிய ஒளி மின்சார தயாரிப்பு அமைப்பில் பல்வேறு செம்பதக் கண்ணாடிகள் உபயோகிக்கப்படுகின்றன.
  • இவை சூரிய ஒளிக் கண்ணாடிகள் என்றும் உயர் பரிமாற்ற ஒளிமின்னழுத்தக் கண்ணாடிகள் என்றும் அறியப்படும்.
  • ஐந்து ஆண்டுகள் நடைமுறைப் படுத்தப்பட இருக்கும் இந்த வரி , உள்நாட்டு செம்பதக் கண்ணாடித் தொழிற்சாலைகளை மலிவான இறக்குமதியிலிருந்து காக்கும் நோக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .
பொருள் குவிப்பு தடுப்பு வரி
  • பொருள் குவிப்பு தடுப்பு வரி என்பது தங்கள் பொருட்களை நியாயமான சந்தை விலைக்கு குறைவாக விற்று , உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அரசாங்கம் கூடுதல் விதிக்கும் கூடுதல் பாதுகாப்பு சுங்க வரி ஆகும் .
  • உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும் , சந்தையில் ஏகபோகத்தைத் தடுக்கவும் , வர்த்தக நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் இத்தகைய வரி விதிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்