வரவிருக்கும் 2018-ஆம் ஆண்டின் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் படைகளினால் சீனாவின் துணை இராணுவக் காவற்படைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
போர் காலங்களிலும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை பராமரிப்பதிலும் சீனாவின் இராணுவப் படைகளுக்கு துணை இராணுவக் காவற்படையானது பின்நிலை ஆதரவுப் படையாக (Back up) செயல்பட்டு வருகிறது.
நடப்பில், 6,66,000 படைவீரர்களைக் கொண்ட வலிமையான இப்படை, சீன அரசாங்கத்தின் தேசிய கவுன்சிலின் கேபினேட், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவ கமிஷன் ஆகியவற்றின் இரட்டைத் தலைமையின் (Dual leadership) கீழ் செயல்படுகின்றது.