TNPSC Thervupettagam

சீனாவின் இராணுவ வலிமை குறித்த வருடாந்திர அறிக்கை

September 8 , 2020 1449 days 562 0
  • சமீபத்தில் அமெரிக்காவானது சீனாவின் இராணுவ வலிமை குறித்த ஒரு வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, சீனக் கடற்படையானது உலகின் மிகப்பெரிய ஒரு கடற்படையாக விளங்குகின்றது.
  • சீனாவின் ஒட்டு மொத்தப் போர்ப் படையானது ஏறத்தாழ 350 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இதில் 130 மிக முக்கிய நிலப்பரப்பு படைச் சாதனங்களும் உள்ளடங்கியுள்ளன.
  • அதே வேளையில் அமெரிக்கக் கடற்படையிடம் 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 293 கப்பல்கள் இருந்தன.

இதர அம்சங்கள்

  • சீனாவின் மேற்குப் பிராந்தியக் கட்டுப்பாட்டகமானது இந்தியாவை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் சீனாவினால் இதற்கென்று அதிகாரப் பூர்வமாக ஒதுக்கப்படும் நிதி 174.4 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
  • அதே வேலையில் இந்தியா 61.7 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்குகின்றது.
  • 2049 ஆம் ஆண்டுக்குள் உலகத் தரம் வாய்ந்த இராணுவத்தை உருவாக்குவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சீனாவானது உலகத் தரம் வாய்ந்த இராணுவம் என்பதை அமெரிக்காவை விட மிகச் சிறப்பு வாய்ந்த இராணுவம் என்று வரையறுக்கிறது.
  • சீனாவானது கடந்த 2 ஆண்டுகளில் ஸ்ட்ரைட் என்ற பயிற்சியில் ஆயுதப் படைகளின் பங்கேற்பை அதிகரித்துள்ளது.
  • சீனாவானது தனது 8 யுவான் வகுப்பைச் சேர்ந்த டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் இதர ஆயுதங்கள், இதர கட்டமைக்கப்பட்ட கடற்படை சாதனங்கள் ஆகியவற்றைப் பாகிஸ்தானிற்கு வழங்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்