கடல் நீர் மற்றும் பருவநிலை மாற்றத்தை புரிந்து கொள்வதற்கு உதவுவதற்காக சீனா கடல்சார் செயற்கைக் கோளை ஏவியது.
இந்த HY-IC செயற்கைக் கோளானது கடலின் நிறம் மற்றும் கடல் நீரின் வெப்பநிலையை கண்காணிப்பதற்கு உதவும். மேலும் உலக கடல் சூழல் மீதான ஆராய்ச்சிக்குத் தேவையான அடிப்படைத் தகவல்களை இந்த செயற்கைக் கோள் அளிக்கும்.
இந்த HY-IC செயற்கைக் கோளானது பச்சையம் மற்றும் மிதக்கும் வண்டல் செறிவுகள் ஆகியவற்றைக் கண்டறியும். மேலும் இது கடலின் மேற்பரப்பில் நிறம் மற்றும் நீரின் வெப்பநிலையை பாதிக்கும் கரைந்த கரிமப் பொருளைக் கண்டறியும்.
இதன் மூலம் கண்டறியும் தகவலானது சீனாவின் கடல், தீவுகள் மற்றும் கடலோர மண்டலங்களின் வளங்கள் மற்றும் சூழல்கள் குறித்த கள ஆய்வுக்குப் பயன்படும். மேலும் இது கடல்சார் பேரிடர் மீட்பு மற்றும் கடல் வளங்களின் நீடித்த பயன்பாட்டுக்கு உதவும்.
2019-ல் செலுத்தப்படவிருக்கும் HY-ID-உடன் இணைந்து, HY-IC ஆனது சீனாவின் கடலின் தொலை உணர்வுத் திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.