TNPSC Thervupettagam

சீனாவின் செயற்கை நிலவு

January 19 , 2022 950 days 455 0
  • சீனா தனது முதல் செயற்கை நிலவை உலகிற்கு அறிமுகப் படுத்தத் தயாராக உள்ளது.
  • சீனாவின் செயற்கை சூரியன் ஆனது சூரியனை விட ஐந்து மடங்கு அதிக வெப்பத்தை அடைந்தது என்ற வெற்றிச் சோதனையைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெறத் தொடங்கியது.
  • காந்தத் தன்மையைப் பயன்படுத்தி குறைந்தப் புவியீர்ப்புச் சூழல்களை உருவாக்கச் செய்வதற்கு இந்த வசதி அவர்களுக்கு உதவும்.
  • நிலவின் மேற்பரப்புடன் ஒத்திருக்கும் வகையில் இந்த ஆராய்ச்சி வளாகம் ஆனது பாறைகள் மற்றும் தூசிகளால் நிரப்பப்படும்.
  • இதுவே உலகிலேயே தன்னளவில் இது போன்ற முதல் வகையிலான ஒரு ஆராய்ச்சிக் கூடமாகும்.
  • இது விஞ்ஞானிகள் விரும்பும் வரை குறைந்த ஈர்ப்பு நிலைகளை தக்க வைக்கும் திறன் கொண்டது.
  • இது 60 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட வெற்றிட அறைக்குள் புவியீர்ப்பு விசையைக் கட்டுப்படுத்தும் திறனும் பூமியின் ஈர்ப்பு விசையை மறையச் செய்யும் திறனும் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்