சீனாவில் உள்ள ஒரு சோதனை அணுக்கரு இணைவு உலையில் ஒரு புதிய சாதனை நேரமாக சுமார் 1,000 வினாடிகளுக்கு மேல் அல்லது 17 நிமிடங்களுக்கு மேலாக அதன் செயல்பாடு நீடித்தது.
அணுக்கரு இணைவு என்பது சூரியனிலோ அல்லது வேறு எந்த ஒரு நட்சத்திரத்திலோ ஆற்றலை உற்பத்தி செய்கின்ற ஒரு வினையாகும்.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கியப் பேரரசில் உள்ள JET ஆய்வகம் ஆனது அணுக்கரு இணைவு மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆற்றலின் அளவில் ஒரு புதியச் சாதனையைப் படைத்தது.
இது ஐந்து வினாடிகளில் சுமார் 12 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்தது என்ற நிலையில் இது அந்தக் காலக் கட்டத்திற்கு சுமார் 10,000 வீடுகளின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது.
தற்போது 10க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்தது 43 அணுக்கரு இணைவு ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.