TNPSC Thervupettagam

சீனாவின் டோங்ஃபெங் - 41 என்ற ஏவுகணை - 15,000 கி.மீ தொலைவு வரம்பு

October 2 , 2019 1788 days 543 0
  • டோங்ஃபெங் - 41 (DF-41) என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா வெளியிட்டுள்ளது.
  • கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70வது ஆண்டு விழாவான சீனாவின் தேசிய தின அணி வகுப்பின் போது (அக்டோபர் 1 ,2019) இந்த ஏவுகணை வெளியிடப்பட்டது.
  • DF-41 ஆனது பூமியில் உள்ள ஒரு மிக சக்திவாய்ந்த ஏவுகணை என்று கூறப்படுகின்றது.
  • இது பூமியில் உள்ள எந்தவொரு ஏவுகணையை விடவும் மிக அதிகமாக 15,000 கிலோ மீட்டர் வரையிலான தொலைவு வரம்பைக் கொண்டுள்ளது.
  • இது தன்னிச்சையாக இலக்கைக் குறிவைக்கும் 10 அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இது அமெரிக்காவை 30 நிமிடங்களில் தாக்கக் கூடிய திறன் கொண்டு விளங்கும்.
  • சீனா தனது நீருக்கடியில் செல்லும் வாகனங்களையும் எதிரியின் கண்ணில் புலப்படாத புதிய டிஆர் - 8 என்ற ஆளில்லா விமானங்களையும் காட்சிப் படுத்தியுள்ளது. அவை ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கும் திறன் கொண்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்