சீனாவின் பாகிஸ்தானிற்கான இரண்டு தொலை உணர்வு செயற்கைக் கோள்கள்
July 12 , 2018 2327 days 728 0
நெடும் பயண 2C ஏவுகலத் தளத்தின் மூலம் பாகிஸ்தானின் PRSS - 1 மற்றும் Pak TES - 1 A ஆகிய இரண்டு தொலை உணர்வு செயற்கைக் கோள்களை ஜியூக்வான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
மொத்தத்தில் இத்திட்டம் நெடும்பயண ஏவுகலத் தொடரின் 279வது திட்டம் ஆகும். சூரிய ஒத்தியக்க சுற்று வட்டப்பாதை (Sun Synchronous orbit) (அ) தாழ் புவி சுற்று வட்டப்பாதையினுள் (Low Earth Orbit) செயற்கைக் கோளை அனுப்புவதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
1999-ல் மோட்டோரோலாவின் இரிடியம் செயற்கைக் கோள்களை சுற்று வட்டப்பாதைக்கு எடுத்துச் செல்லப்பட்டப் பிறகு ஏறத்தாழ இருபது வருடங்களில் செலுத்தப்பட்ட முதல் சர்வதேச வணிகரீதியான ஒரு திட்டம் இது ஆகும்.
PRSS - 1, பாகிஸ்தானுக்கு விற்கப்பட்ட சீனாவின் முதல் ஒளியியல் தொலை உணர்வு செயற்கைக்கோள் ஆகும்.
இதனால் இரவு மற்றும் பகல் நேர கண்காணிப்பை செய்து முடிக்க முடியும். மேலும் இது மேகங்கள் நிறைந்த நிலையிலும் காணும் திறனைக் கொண்டுள்ளது.
PakTES - 1 A, பாகிஸ்தானின் விண்வெளி நிறுவனம் SUPARCO-ன் பொறியாளர்களினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அறிவியல் செயற்கைக் கோள் ஆகும். (SUPARCO - Space and Upper Atmosphere Research Commission).
இந்த செயற்கைக் கோள்கள் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சீனா-பாகிஸ்தானின் பொருளாதார பெருவழிப்பாதைக்கு (China-Pakistan Economic Corridor CPEC) விண்வெளி தொலை உணர்வு தகவல்களை வழங்கும்.