TNPSC Thervupettagam

சீனாவின் மக்கள் தொகை 2023 ஆம் ஆண்டில் மீண்டும் சரிவு

January 21 , 2024 309 days 392 0
  • சீனாவின் மக்கள்தொகையானது, வீழ்ச்சியடைந்த பிறப்பு விகிதம் மற்றும் COVID-19 பெருந்தொற்று சார்ந்த இறப்புகளின் காரணமாக 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்துள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் சீனாவில் உள்ள மொத்த மக்கள் எண்ணிக்கை 2.75 மில்லியன் குறைந்து 1.409 பில்லியனாக உள்ள நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் பதிவானதை விட வேகமாக சரிந்துள்ளது.
  • மாவோ சேதுங் சகாப்தத்தின் பெரும் பஞ்சத்தின் போது, 1961 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சரிவிற்குப் பிறகு இத்தகைய சரிவு பதிவாவது இது முதல் முறையாகும்.
  • 1980 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அமல்படுத்தப்பட்ட ஒரு குழந்தை கொள்கையின் விளைவாக நாட்டின் பிறப்பு விகிதம் பல தசாப்தங்களாக சரிந்து வருகிறது.
  • நீண்ட கால அடிப்படையில், சீனாவின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் 109 மில்லியனாக சுருங்கும்.
  • இது 2019 ஆம் ஆண்டில் அந்நாட்டு அரசு வெளியிட்ட முந்தைய முன் கணிப்பு சரிவை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
  • 2022 ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 6.77 ஆக இருந்த சீனாவின் பிறப்பு விகிதம் ஆனது கடந்த ஆண்டு 6.39 ஆக இருந்த நிலையில் இது இதுவரையில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைவான பிறப்பு விகிதம் ஆகும்.
  • ஜப்பானின் பிறப்பு விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 6.3 பிறப்புகள், என்ற நிலையில் தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 4.9 ஆகும்.
  • 2022 ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 7.37 ஆக இருந்த சீனாவின் இறப்பு விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 1,000 பேருக்கு 7.87 ஆக அதிகரித்துள்ளது.
  • இது 1974 ஆம் ஆண்டு கலாச்சாரப் புரட்சிக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச இறப்பு விகிதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்