TNPSC Thervupettagam

சீனாவின் மக்கள் தொகையில் வீழ்ச்சி

January 18 , 2023 551 days 246 0
  • 2022 ஆம் ஆண்டில் சீனாவில் 9.56 மில்லியன் மக்கள் பிறந்ததாகவும், 10.41 மில்லியன் மக்கள் இறந்துள்ளதாகவும் சீன அரசாங்கம் கூறியுள்ளது.
  • 1960 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து சீனாவில் பிறப்புகளை விட இறப்புகள் அதிகமாக பதிவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
  • இங்கு பிறப்பு எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் பதிவான 10.6 மில்லியன் என்ற அளவிருந்து குறைந்துள்ளது என்பதோடு, இது தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும் குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 1.4118 பில்லியன் ஆக பதிவாகியுள்ள நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 850,000 அளவிற்குக் குறைந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 7.52 ஆக இருந்த பிறப்பு விகிதம் 2022 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது.
  • 2035 ஆம் ஆண்டளவில், சீனாவில் 400 மில்லியன் மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிற நிலையில், இது அதன் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
  • ஒப்பிட்டுப் பார்க்கையில் 2021 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் 1,000 பேருக்கு 11.06 பிறப்புகளும், ஐக்கிய இராச்சியத்தில் 10.08 பிறப்புகளும் பதிவாகியுள்ளன.
  • இந்தியாவில் அதே ஆண்டில் பதிவான பிறப்பு விகிதம் 16.42 ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்