சீனாவின் மிகப்பெரிய இராணுவப் பயிற்சி
August 7 , 2022
716 days
334
- தைவானைச் சுற்றி உள்ள பகுதிகளில் சீனா தனது மிகப்பெரிய ஒரு இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
- சீன ஊடகங்கள் இந்தப் பயிற்சியை ‘மறுஒருங்கிணைப்புச் செயல்முறைக்கான' ஒரு ஒத்திகையாகக் குறிப்பிடுகின்றன.
- தைவான் பகுதி முழுவதும் உள்ள ஆறு மண்டலங்களில் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
- சீனாவின் கடற்படை, விமானப்படை மற்றும் இதர துறைகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
- பதிலுக்கு, தைவானும் தனது இராணுவத்தை எச்சரித்து, தயார் செய்து, பல குடிமைப் பாதுகாப்புப் பயிற்சிகளை மேற்கொண்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-826.jpg)
Post Views:
334